சினிமா

தளபதி விஜய் நண்பருக்கு தல அஜித் செய்த காரியம்..!

Summary:

ajith-good-habit

தமிழ் சின்னம்மாவின் முன்னணி நடிகர்கள் தான் தல அஜித் மற்றும் தளபதி விஜய். இவர்கள் இருவருக்கும் தனி தனியாக ஒரு ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது என்று தான் கூற வேண்டும். அவர்கள் இருவருமே இறக்க குணம் உள்ளவர்கள் தான் என்று அனைவருக்கும் தெரிந்ததே. 

இவர்கள் இருவரின் ரசிகர்கள் தான் மோதிக்கொள்வார்களே தவிர இவர்கள் இருவரும் என்றும் மோதிக்கொண்டது இல்லை. எப்பவும் ஒன்றுமையாக தான் இருப்பார்கள். இவர்கள் இருவருக்கு இடையில் எந்த கருது வேறுபாடுகளும் இல்லை.

அந்த வகையில் விஜய் நண்பர் ஒருவர் தல அஜித்தை புகழ்ந்து பேசியுள்ளார். தளபதி விஜயின் நண்பர் சஞ்சீவ் ஒரு நாள் அஜித்தை சந்தித்து பேசும் போது, தல அஜித் தீனா ஷூட்டிங்கில் இருந்தாராம். அப்போது சஞ்சீவ் நடிக்க வாய்ப்பு கேட்க சென்றிருந்தாராம்.  உடனே அஜித் அவர் புகைப்படங்களை பார்த்தாராம். நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள், நீங்கள் ஹீரோவாக கூட மாறலாம். மேலும் உங்களது ஸ்டைல் கொஞ்சம் மாற்றுங்கள் இன்னும் நன்றாக இருக்கும் என்று கூறினாராம். அப்போது சஞ்சீவ் தயங்கி நின்றதை பார்த்து பணம் இல்லையா நான் தரட்டுமா என்று அவருக்கு உதவ முன்வந்தாராம். இந்த நிகழ்வு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


Advertisement