லாக்டவுனில் புதிய விஷயத்தில் ஆர்வம் காட்டியுள்ள தல அஜித்.! என்ன விஷயம் தெரியுமா?

லாக்டவுனில் புதிய விஷயத்தில் ஆர்வம் காட்டியுள்ள தல அஜித்.! என்ன விஷயம் தெரியுமா?


ajith-forming-new-flower-garden

தல அஜித் தமிழ் சினிமாவில் கொண்டாடக்கூடிய ஒரு முன்னணி நடிகர். இவருக்கு என்று ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ளது. இவரின் பிறந்த நாள் மற்றும் படங்களை ரசிகர்கள் விழா போல கொண்டாடி வருகின்றனர். 

தல அஜித் எப்போதும் எளிமையை விரும்பக்கூடியவர். சிறந்த நடிகர், எந்த பந்தாவும் இல்லாதவர் என பலர் அஜித்தை பற்றி புகழாரம் சூட்டியதை கேள்விப்பட்டிருப்போம். தனது வேலையில் அதிக ஈடுபாட்டுடன் செயல் படக்கூடியவர். அதே போல் தற்போது அரசு அனுமதி வழங்கிய அடுத்த நாளே வலிமை படப்பிடிப்பை தொடங்கலாம் என படக்குழுவிடம் அஜித் கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Ajith

இந்நிலையில் தல அஜித் லாக்டவுனில் தனது வீட்டில் பூ தோட்டம் அமைக்க ஆர்வம் காட்டியுள்ளார். இதுவரை 75 வகையான பூ செடிகளை அமைத்துடன் மட்டுமின்றி மூலிகை தோட்டத்திலும் ஆர்வம் காட்டி வருகிறார்.