ப்பா.. அழகில் அம்மா ஷாலினியையும் மிஞ்சிய அஜித் மகள்! மாஸ் லுக்கில் இணையத்தை கலக்கும் சூப்பர் புகைப்படம்!!



ajith-family-photo-viral

தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட், மாஸ் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் நடிகர் அஜித்குமார். கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருக்கும் அவரது நடிப்பில் அண்மையில் வெளிவந்து தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் திரைப்படம் வலிமை. 

இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், பெரும் வசூல் சாதனை படைத்து வருகிறது. ரசிகர்கள் அதனை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். அஜித்தின் மனைவி நடிகை ஷாலினி. இருவரும் அமர்க்களம் படத்தில் இணைந்து நடித்தபோது காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு அனோஷ்கா, ஆத்விக் என இரு பிள்ளைகள் உள்ளனர்.

Ajith

அஜித் குறித்த எந்த தகவல்கள், புகைப்படங்கள் வெளிவந்தாலும் அதனை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பெருமளவில் ட்ரெண்டாக்குவர். இந்நிலையில் தற்போது அஜித் மகன், மகளுடன் செம மாஸ் லுக்கில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி பெருமளவில் வைரலாகி வருகிறது.