சினிமா

500 கி.மீ. பைக் பயணம்.! ஏழை ரசிகரின் குடிசையில் டீ குடித்த அஜித்.! வைரலாகும் புகைப்படம்.!

Summary:

Ajith drink tea in poor man house while bike trip

நேற்று முன்தினம் தல அஜித் தனது 49 வது பிறந்தநாளை கொண்டாடினர். அஜித்தின் பிறந்தநாளுக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்ததோடு அவருடன் நடந்த மறக்க முடியாத அனுபவங்கள் பற்றியும் பகிர்ந்துகொண்டனர்.

அந்தவகையில் வீரம் படத்தில் அஜித்தின் தம்பிகளில் ஒருவராக நடித்த சுஹேல் சந்தோக், அஜித்துடனான சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்றை பகிர்ந்துள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு வீரம் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோது அஜித்தும், சுஹேலும் 500 கிலோமீட்டர் பைக் டிரிப் சென்றுள்ளனர்.

நீண்ட தூரம் பைக்கில் சென்ற அவர்கள் டீ குடிப்பதற்காக ஒரு இடத்தில் நின்றபோது அங்கு ஒரு குடிசை இருந்துள்ளது. குடிசையில் வசித்த குடும்பத்தினர் அஜித்தை அடையாளம் கண்டதோடு, தங்கள் வீட்டில் வந்து டீ குடிக்குமாறு அன்புடன் கேட்டுள்ளனர்.

இதனை ஏற்றுக்கொண்ட அஜித் அவர்கள் வீட்டிற்கு சென்று டீ குடித்துள்ளார். இதனை அடுத்து, அந்த குடும்பத்தினர் அஜித்துடன் புகைப்படம் எடுக்க ஆசை பட்டுள்ளனர். ஆனால், அஜித்திடம் எப்படி கேட்பது என தயங்கிக்கொண்டிருக்க அஜித் அவர்களை அழைத்து புகைப்படம் எடுத்தது மட்டுமல்லாது, அந்த புகைப்படத்தை பிரிண்ட் போட்டு அனுப்பியும் வைத்ததாக சுஹேல் தெரிவித்துள்ளார்.


Advertisement