சினிமா

மருத்துவமனையில் முகக்கவசத்துடன் தல அஜித் திடீர் விசிட்..! உடன் வந்த மனைவி ஷாலினி..! தலைக்கு என்னாச்சு.? வைரல் வீடியோ.!

Summary:

Ajith and Shalini hospital visit during lockdown leave fans worried

முகக்கவசம் அணிந்து தனது மனைவியுடன் அஜித் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உலாவும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

இயக்குனர் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்துவரும் தல அஜித் கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்துவைக்கப்பட்டுள்ளநிலையில் தனது வீட்டில் இருந்து ஓய்வு எடுத்து வருகிறார். இந்நிலையில்தான் அஜித் முகக்கவசம் அணிந்து மருத்துவமனையில் உலாவரும் வீடியோ வலைத்தளங்களில் ட்ரெண்டானது.

வீடியோ வைரலானதை அடுத்து, கொரோனா தீவிரமாக பரவிவரும் நிலையில் அஜித் மருத்துவமனைக்கு சென்றது அவரது ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. ஆனால், பிரச்சனையெல்லாம் ஒன்றும் இல்லை, மனைவியுடன் அஜித் வழக்கமான உடல் பரிசோதனைக்காகத்தான் வந்ததாக தற்போது கூறப்பட்டுள்ளது.


Advertisement