என்னப்பா இப்படி ஆச்சே! தல அஜித் வீட்டிற்கு வந்த சோகம்! வருத்தத்தில் ரசிகர்கள்.

என்னப்பா இப்படி ஆச்சே! தல அஜித் வீட்டிற்கு வந்த சோகம்! வருத்தத்தில் ரசிகர்கள்.


Ajith

தல அஜித் அவர்கள் பல வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நடிகராக வலம் வருபவர். இவருக்கு பட்டிதேட்டி எங்கும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இவருக்கு ரசிகர்களாக இருந்து வருகின்றனர்.

ஆனால் தல அஜித் அவர்கள் எந்த ஒரு பொது நிகழ்ச்சி மற்றும் பட விழாக்களுக்கு வருவது கிடையாது. இருந்தாலும் அவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் நடிகர் அஜித் அவர்கள் கமல் 60 விழாவில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Ajith

ஆனால் அந்நிகழ்வில் அவர் கலந்து கொள்ளவில்லை. இதனால் ரசிகர்கள் கொஞ்சம் வருத்தத்தில் இருந்தனர். ஆனால் தற்போது அவர் வராததற்கான காரணம் வெளியாகியுள்ளது. அதனை கேட்டதும் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்து வருகின்றனர்.

அதாவது தல அஜித் அவர்களின் தந்தை உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவருடன் கூட இருந்து அனைத்தையும் கவனித்து வருவதால் தான் அவரால் நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.