இப்போது வரை அஜித் ரசிகர்களால் ரசிக்ககூடிய படமாக அமைந்தது எந்த படம் தெரியுமா? வைரலாகும் ட்வீட் பதிவு. - TamilSpark
TamilSpark Logo
சினிமா

இப்போது வரை அஜித் ரசிகர்களால் ரசிக்ககூடிய படமாக அமைந்தது எந்த படம் தெரியுமா? வைரலாகும் ட்வீட் பதிவு.

தல அஜித் தமிழ் சினிமாவில் கொண்டாடக்கூடிய ஒரு மிக சிறந்த முன்னணி நடிகர். இவரின் எளிமை, நல்ல குணம், ஸ்டைலுக்கு என்றே ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர். இவர் பொதுவாக எந்த ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்க தான் செய்கிறது.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான நேர் கொண்ட பார்வை படம் பெண்கள் மற்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது நடிகர் அஜித் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது இப்படம் குறித்து எந்த தகவலும் வராத நிலையில் அஜித் ரசிகர்கள் பொங்கலுக்கு வெளியான அஜித் படத்தை ட்ரெண்டாக்கி, அதிகம் ஷேர் செய்து வருகின்றனர். அதில் இப்போது வரை அஜித் ரசிகர்களால் அதிகம் ரசிக்ககூடிய படமாக தீனா படம் திகழ்கிறது.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo