கோவிலை அபகரிக்க முயற்சிக்கும் நடிகர் வடிவேலு? ஒன்றுகூடிய கிராமம்.. பரபரப்பு புகார்.!
"திருவண்ணாமலையில் திடீரென சாமி தரிசனம் செய்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!" வைரலாகும் புகைப்படங்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லதா ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் திரைப்பட இயக்குனராகவும், பின்னணிப் பாடகியாகவும் உள்ளார். இவர் 2012ஆம் ஆண்டு தனுஷ் நடித்த "3" திரைப்படத்தை இயக்கியதின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.
2003ஆம் ஆண்டு "விசில்" படத்தில் இடம்பெற்ற "நட்பே நட்பே" பாடலை பாடியதின் மூலம் பாடகியாக அறிமுகமானார். மேலும் இவர் நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு லிங்கா, யாத்ரா என்று இரண்டு மகன்கள் உள்ளனர்.
தற்போது ஐஸ்வர்யா "லால் சலாம்" என்ற படத்தை இயக்கி வருகிறார். படத்தில் ரஜினி ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இந்நிலையில் ரஜினி நேற்று தனது 73வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதையடுத்து நேற்று ரஜினிக்கு பிரபலங்கள், ரசிகர்கள் அனைவரும் வாழ்த்து கூறி வந்தனர்.
மேலும் ரஜினி ரசிகர்கள் கோவிலில் அன்னதானம், பாலாபிஷேகம் போன்றவற்றை செய்தனர். இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தந்தையின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று திருவண்ணாமலை சென்று அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.