தனுஷுடனான பிரிவிற்கு பிறகு ஐஸ்வர்யா செய்த வேலை! தீயாய் பரவும் புகைப்படம்!!

தனுஷுடனான பிரிவிற்கு பிறகு ஐஸ்வர்யா செய்த வேலை! தீயாய் பரவும் புகைப்படம்!!aishwarya-starts-music-album-work

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முக திறமை கொண்டு விளங்குபவர் நடிகர் தனுஷ். அவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு என பல மொழிப் படங்களிலும் மிரட்டி வருகிறார். இவர் கடந்த 2004-ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகிறது.

இந்த நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பிரிய போவதாக அண்மையில் அறிவித்தனர்.  இது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  மேலும் விவாகரத்திற்கு காரணம் இதுதான் என சமூக வலைத்தளங்களில் பல வதந்திகளும் பரவி வருகிறது. ஆனால் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் அவரவர் பணிகளில் பிஸியாக உள்ளனர்.

aishwarya

ஐஸ்வர்யா தனியார் நிறுவனத்துடன் இணைந்து இசை ஆல்பத்தை உருவாக்க  உள்ளார்.
அந்த ஆல்பத்திற்கான பேச்சு வார்த்தை ஹைதராபாத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் நடைபெற்றுள்ளது. அதில் ஐஸ்வர்யா கலந்து கொண்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் பரவி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.