சினிமா

நானா.. இல்லவே இல்லை!! வதந்திக்கு மறுப்பு தெரிவித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்! ஷாக்கான ரசிகர்கள்!!

Summary:

தமிழ் சினிமாவில் தனது திறமையால் எத்தகைய கதாபாத்திரமாக இருந்தாலும் தனது இயல்பான நடிப்பால் அ

தமிழ் சினிமாவில் தனது திறமையால் எத்தகைய கதாபாத்திரமாக இருந்தாலும் தனது இயல்பான நடிப்பால் அனைவரையும் அசர வைத்து தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவரது நடிப்பில் வெளிவந்த காக்கா முட்டை, கனா, க/பெ ரணசிங்கம் போன்ற படங்கள் அவரது நடிப்பு திறமைக்கு தீனி போடும் வகையில் அமைந்தது.

சவாலான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துவரும் ஐஸ்வர்யா ராஜேஷ்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் அவர் ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை சாந்தி சௌந்தர்ராஜனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வைரலாக பரவியது.

இந்நிலையில் சாந்தி சௌந்தர்ராஜன் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவில்லை என அவரது செய்தி தொடர்பாளர் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஜெயசீலன் தவப்புதல்வி இயக்கவுள்ள இந்த படத்தை 888 புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கவுள்ளார். இந்தப் படம் தொடர்பான அறிவிப்பை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ளார். உடனே அவர் அப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவியதாக கூறப்படுகிறது.

 


Advertisement