ஊரடங்கு போர் அடித்ததால் அந்த விசயத்துக்கு அடிமையாக மாறிவிட்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..! அவரே பகிர்ந்த தகவல்..!

ஊரடங்கு போர் அடித்ததால் அந்த விசயத்துக்கு அடிமையாக மாறிவிட்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..! அவரே பகிர்ந்த தகவல்..!


aishwarya-rajesh-addicted-to-ludo-game

ரம்மி என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். சினிமா நடிகைகள் என்றாலே மாடர்ன் உடையில், கவர்ச்சி காட்டி, ஆட்டம், பாட்டம் என்றுதான் கதை அமையும் என்பதையும் தாண்டி இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக, நல்ல கதை உள்ள படமாக தேர்வு செய்து நடித்து மக்களின் வரவேற்பை பெற்றுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

கடைசியாக சிவகார்த்திகேயன் நடித்த எங்க வீட்டு பிள்ளை படத்தில் ஹீரோவுக்கு தங்கையாக நடித்து அசத்தியிருந்தார். தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்துவரும் இவர் ஊரடங்கு என்பதால் வீட்டில் ஓய்வு எடுத்துவருகிறார்.

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ள இவர், ஊரடங்கு சமயத்தில் லுடோ என்ற விளையாட்டிற்கு அடிமையாகிவிட்டதாகவும், வேறு யாரெல்லாம் இந்த விளையாட்டிற்கு அடிமையாகிவிட்டீர்கள் எனவும் கேட்டுள்ளார்.

Aishwarya rajesh