சினிமா

கொரோனாவிடம் இருந்து மீண்டுவிட்டாரா ஐஸ்வர்யா ராய்! தற்போதைய நிலை என்ன? அபிஷேக் தகவல்

Summary:

Aishwarya Rai Bachchan and Aaradhya Bachchan emerge Corona-free, return to home

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா குணமாகி வீடு திரும்பிவிட்டதாக அபிஷேக் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பாலிவுட் திரைத்துறையில் முக்கிய பங்காற்றும் அமிதாப் பச்சன் குடும்பத்தில் அடுத்தடுத்தாக கொரோனா தொற்று உறுதியானது. அமிதாப், அபிஷேக், ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆராத்யா ஆகிய நான்கு பேரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் கொரோனாவிற்கான சிகிச்சை பெற்று வந்தனர்.

தற்போது ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆராத்யாவிற்கு கொரோனா தொற்று இல்லை என முடிவுகள் வெளிவந்துள்ளன. அதனைத் தொடர்ந்து இவர்கள் இருவர் மட்டும் தற்போது வீடு திரும்பிவிட்டதாகவும், அபிஷேக் மற்றும் அமிதாப் இருவரும் மருத்துவமனையில் இருப்பதாகவும் அபிஷேக் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Advertisement