ஜோடி no 1ல் சிவகார்த்திகேயனுடன் ஆடிய ஐஸ்வர்யாவா இது? வைரலாகும் புகைப்படத்தால் தலை சுற்றி போன ரசிகர்கள்!!

ஜோடி no 1ல் சிவகார்த்திகேயனுடன் ஆடிய ஐஸ்வர்யாவா இது? வைரலாகும் புகைப்படத்தால் தலை சுற்றி போன ரசிகர்கள்!!



aishwarya-prabhakaran-photo-viral

பிரபல தொலைக்காட்சியான விஜய் மற்றும் சன் தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளை மிகவும் அருமையாக தொகுத்து வழங்கி பிரபலமானவர் ஐஸ்வர்யா பிரபாகர். இவர்  தொகுப்பாளினியாக மட்டுமின்றி விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி no 1  நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடனமாடி தனது முழு திறமையை வெளிப்படுத்தினார். 

மேலும் மெலிந்த உடலுடன் அனைவரையும் ஈர்க்கும் அழகுடன் இருக்கும், ஐஸ்வர்யாவிற்கெனவே ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
ஆனால் அவர் டிவி நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் அதிக உடல் எடையுடன் மிகவும் குண்டாக இருந்துள்ளார்.

aiswarya

 அதனை தொடர்ந்து தீவிர முயற்சி மற்றும் கடின உழைப்பினால் எடையை குறைத்து மிகவும் குறைத்து, மெலிந்த பின்னரே தொலைக்காட்சி வாய்ப்புகள் அவரைத் தேடி வந்துள்ளது. இந்நிலையில் அவர் தனது குண்டான மற்றும் உடல் எடை குறைத்த புகைப்படங்களை இணைத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் உடல்எடை அதிகமாக உள்ளவர்கள் எடையை குறைப்பதற்கு அவர்களை ஊக்குவிக்கும் விதமாக அந்த புகைப்படத்தை ஐஸ்வர்யா பகிர்ந்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் ஐஸ்வர்யாவா இது என அதிர்ச்சியடைந்துள்ளனர்.