சினிமா

அடக்கொடுமையே! ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குனருடன், இப்படியா செய்வது? பரபரப்பில் படக்குழு

Summary:

aishwarya dutta fight with aleka director

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் ஐஸ்வர்யா தத்தா.

அதனை தொடர்ந்து அவர் தற்போது நெடுஞ்சாலை படத்தின் கதாநாயகன் ஆரியுடன் ஜோடி சேர்ந்து தற்பொழுது அலேகா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை எஸ்.எஸ் ராஜமித்திரன் இயக்கி வருகிறார். மேலும் இப்படத்தை க்ரியேட்டிவ் டீம்ஸ் E.R ஆனந்தன் மற்றும் க்ளோஸ்டார் க்ரியேஷன் பீ தர்மராஜ் இணைந்து தயாரிக்கிறார்.

தில்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு  சத்யா இசையமைக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரும் கிளப்பியது. இதனைத் தொடர்ந்து படப்பிடிப்பிற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

 இந்நிலையில் படப்பிடிப்பில் இயக்குனருக்கும், நடிகை ஐஸ்வர்யாவிற்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து படக்குழுவினர்  கூறுகையில் ஐஸ்வர்யா தத்தா தினமும் படப்பிடிப்புக்கு தாமதமாக வருவதால் அவருக்காக மற்ற நடிகர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் வெகு நேரம் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இயக்குமார்  படப்பிடிப்புக்கு சரியான நேரத்திற்கு வருமாறு ஐஸ்வர்யா தத்தாவிடம் கூறியுள்ளார்.

தொடர்புடைய படம்

ஆனால் ஐஸ்வர்யா அதனை பொருட்படுத்தாத நிலையில் இயக்குனர் ஐஸ்வர்யா தத்தாவை கண்டிக்க படப்பிடிப்பில் ஐஸ்வர்யா தத்தாவுக்கு இயக்குனருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது என்ன கூறியுள்ளார்.


Advertisement