சினிமா

மீண்டும் நயன்தாராவுடன் நடிக்க உள்ளாரா யோகிபாபு.!

Summary:

Again yoki babu joined with Nayanthara movie

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார் யோகி பாபு. சாதாரண ஒரு நடிகனாக சினிமாவில் அறிமுகமான இவர் நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு யாமிருக்க பயமேன் என்றே படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். அதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவருகிறார் யோகிபாபு.

மேலும், அஜித், விஜய் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் யோகி பாபு. அதுமட்டும் இல்லாமல் தனி ஒரு நடிகராகவும் ஒருசில படங்களில் நடித்துவருகிறார். 

இந்நிலையில் தற்போது யோகிபாபு புதிதாக இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். அப்படத்தை டகால்டி படத்தை தயாரித்த 18 ரீல்ஸ் ப்ரொடக்‌ஷ்னின் எஸ்.பி.சவுத்ரி இந்த படத்தை தயாரிக்கவுள்ளாராம். மேலும் அந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை முன்னணி பெண் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் முயற்சி செய்து வருகின்றனர். 

அப்படி நயன்தாரா மட்டும் அந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டால் கோலமாவு கோகிலா படத்தை தொடர்ந்து இரண்டாம் முறையாக யோகி பாபு நயன்தாராவுடன் சேர்ந்து நடிக்க வாய்ப்பு ஏற்ப்படும். 


Advertisement