
சமூக வலைதளங்களில் பிரபலங்கள் பெயரில் போலி கணக்குகள் தொடங்கி அவர்களை போலவே பிற பிரபலங்களுக்
சமூக வலைதளங்களில் பிரபலங்கள் பெயரில் போலி கணக்குகள் தொடங்கி அவர்களை போலவே பிற பிரபலங்களுக்கு செய்திகளை பகிர்வது, தெரிந்தவர்களுக்கு தவறான வழியில் குறுஞ்செய்தி அனுப்புவது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. உலகெங்கிலும் உள்ள பிரபலங்கள் இந்த பிரச்சனையை சந்தித்துதான் வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது நடிகை அதுல்யா ரவி தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்த பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், பேஸ்புக்கில் எனது பெயரில் போலியாக ஒரு பக்கத்தை ஆரம்பித்து, தனிப்பட்ட முறையிலும், திரையுலகில் எனக்குத் தெரிந்தவர்களுக்கு ஏன் செய்தி அனுப்புகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. இது மிகவும் மோசமான செயல். ஏற்கனவே இதுகுறித்துப் புகார் அளித்துவிட்டேன்.
மேலும் தற்போது நான் இதன்மூலம் பேஸ்புக்கில் இல்லை என்பதை உங்கள் அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன். இந்தப் பக்கத்தைப் பற்றிப் புகார் கொடுங்கள்என்று போலி கணக்கின் முகப்பு பக்கத்தின் புகைப்படத்தை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அதுல்யா தற்போது சாந்தனுவுடன் இணைந்து முருங்கைகாய் சிப்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
Advertisement
Advertisement