அடேங்கப்பா.. இயக்குனர் ஷங்கர் மகளின் கிரஷ் இவரா?? உண்மையிலேயே செம மாஸ் ஹேண்ட்சம்தான்!!

அடேங்கப்பா.. இயக்குனர் ஷங்கர் மகளின் கிரஷ் இவரா?? உண்மையிலேயே செம மாஸ் ஹேண்ட்சம்தான்!!


aditi-shankar-talk-about-her-crush

சினிமா உலகில் ஏராளமான பிரம்மாண்ட, பிளாக்பஸ்டர் சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். இவரது மகள் அதிதி ஷங்கர். அவர் தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோயினாக களமிறங்கியுள்ளார். அதாவது அதிதி ஷங்கர், முத்தையா இயக்கத்தில் விருமன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இயக்குனர் முத்தையா இதற்கு முன் கொம்பன், மருது போன்ற படங்களை இயக்கியவர். இப்படத்தில் அவர் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார். விருமன் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

Aditi shankar

படம் விநாயகர் சதுர்த்தியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில், அதிதி சங்கரிடம்,  உங்களின் செலிபிரேட்டி க்ரஸ் யார் என கேட்கபட்டுள்ளது. அதற்கு அவர் "கேஜிஎப்”ராக்கி பாய் (யாஷ்) என்று கூறியுள்ளார். இதை கேட்ட யாஷ் ரசிகர்கள் அந்த வீடியோவை உற்சாகத்துடன் டிரெண்டாக்கி வருகிறார்கள்.