90'ஸ் கிட்ஸுக்கு சூப்பர் அப்டேட்.. அப்பாஸ் மீண்டும் என்ட்ரி.. எந்த படத்தில் தெரியுமா.?!
பாகுபலியை மிஞ்சும் அட்லீயின் படம்...! சற்றுமுன் வெளியான அதிர்ச்சி தகவல்...!

இயக்குனர் ராஜமவ்லியின் இயக்கத்தில் உருவான படம் தான் பாகுபலி. இவருடைய இந்த படம் இந்திய சினிமாவையே ஒரு கலக்கு கலக்கியது.
பாகுபலி முதல் பாகம் ஒரு மிக பெரிய வெற்றியை தேடி தந்தது.
அது மட்டும் இல்லாமல் வசூலையும் வாரி தள்ளியது. இந்த படம் ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் என பல மொழிகளில் டப்பிங் செய்ய பட்டது. மேலும் டப்பிங் செய்ய பட்ட அணைத்து மொழிகளிலும் இந்த படம் மிக பெரிய வெற்றியை தந்தது.
இதனை அடுத்து ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் இந்த பாகுபலி படத்தின் இரண்டாவது பாகம் எப்போது வரும் என்ற அளவிற்கு ஆர்வமாக எதிர்பார்த்தனர். இந்த பாகுபலி படம் பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்தது என்பது ஒரு மிக பெரிய விஷயம்.
ஆனால் அதை விட ஒரு மிக பெரிய விஷயம் என்னவென்றால் அந்த படம்
சீனாவில் திரையில் வெளியிடப்பட்டது. இந்த பாகுபலி படம் சீனாவில் மொத்தம் 6 முதல் 7 ஆயிரம் திரையரங்குகளில் வெளியிட பட்டது.
இதனை அடுத்து பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் குறைவாக ஓடியது.
அதற்கு பின்பு இளைய தளபதி விஜய்யின் நடிப்பில் உருவான படம் தான் மெர்சல். விஷயம் இப்போது என்ன என்றால் இந்த மெர்சல் படம் சீனாவில்
வெளியாக போவதாக ஏற்கனவே நாங்கள் கூறியிருந்தோம்.
அது போலவே தற்போது சீனாவில் விஜய்யின் நடிப்பில் உருவான இந்த மெர்சல் படம் மொத்தம் 10 ஆயிரம் திரையரங்குகளில் வெளியிட போவதாக கூறி இருக்கிறார்கள்.
இந்த படம் வசூலை வாரி எடுக்கும் என்றும் நம்ப படுகிறது. மேலும் இந்த படம் பாகுபலியை மிஞ்சி பல திரை அரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிட தக்கது.