சினிமா

தனது முதல் திரைப்படத்திற்கு யாஷிகா ஆனந்த் வாங்கிய சம்பளம் எவ்ளவு தெரியுமா? தெரிஞ்சா அதிர்ச்சியாயிடுவீங்க!

Summary:

Actress yasika anandh early life and her first movie salary

இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பெரிய இடத்தை பிடித்தவர் யாஷிகா ஆனந்த். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றிபெறவே இவரது புகழும் தமிழகம் முழுவதும் பரவியது. அதற்கு கிடைத்த பரிசுதான் பிக் பாஸ்.

தற்போது 19 வயதாகும் இவர்தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் வயது குறைந்த போட்டியாளர். ஆனால் இவரது பேச்சும், நடவடிக்கைகளும் ஒரு முதிர்ச்சிடைந்த பெண் போல் தோன்றுகிறது.

தனது 15 வயதிலேயே நடிக்க வந்துள்ளார் யாஷிகா ஆனந்த். ஆனால் இவர் நடித்த திரைப்படங்கள் எதுவமே திரைக்கு வரவில்லையாம். சமீபத்தில் இது குறித்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் கூறியபோது, நான் நிறைய படம் 10 ஆம் வகுப்பு படிக்கும் போதே நடிச்சிருக்கேன்.

வெறும் 750 ரூபாய்க்கு கூட நான் நடித்துளேன். ஆனால் சம்பளம் குறைவு என்பதற்காக நான் ஏனோதானோனு நடிக்கவில்லை. எனது முழு ஈடுபட்டுடன்தான் நடித்தேன் ஆனால் நான் நடித்த எந்த திரைப்படமும் திரைக்கு வரவில்லை என்றார். 

இந்த நிலையில்தான்  கார்த்திக் சார் மூலம் “துருவங்கள் 16 ” படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போ கூட நான் அந்த படம் நிச்சயம் திரைக்கு வரத்து என்றுதான் நினைத்தேன். அப்புறம் ஷூட்டிங் போன அப்புறம் கூட நான் கார்த்திக் சார்கிட்ட கேட்ட , சார் இந்த படம் சாத்தியமா ரீலீஸ் ஆகுமா என்று கேட்டேன். ஆனால், அந்த படத்தை என் அம்மாவுடன் பார்த்த போது அவர்கள் கண்ணில் இருந்து வந்த ஒரு துளி கண்ணீர் நான் சாதித்து விட்டேன் என்ற ஒரு நம்பிக்கையை அளித்தது என்று கூறியிருக்கிறார் யாஷிகா.


Advertisement