சினிமா

சிங்கிளாக இருக்க இதுதான் காரணமா...! உண்மையை போட்டுடைத்த யாஷிகா ஆனந்த்!

Summary:

சிங்கிளாக இருக்க இதுதான் காரணமா...! உண்மையை போட்டுடைத்த யாஷிகா ஆனந்த்!

நடிகை யாஷிகா ஆனந்த் பற்றி அறிமுகம் தேவையில்லை. அந்த  அளவிற்கு  சமூக  வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை  வெளியிட்டு இளசுகளை கவரும்  நடிகைகளில்  இவரும் ஒருவர்.

இந்நிலையில் பிரபல விஜய்டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2வில் கலந்துகொண்டு   மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர். அதன்பிறகு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், நிறைய போட்டோ ஷுட் என பிஸியாக இருந்த அவர்,கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரிய கார் விபத்தில் சிக்கி நடக்க முடியாமல் படுத்த படுக்கையில் சிகிச்சை பெற்று மீண்டும பழைய நிலைமைக்கு வந்துள்ளார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கு அவர், தற்போது தான் சிங்கிள் தான் என்றும், அதற்கான காரணம் என்ன என கூறியும்  ஒரு ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த  வீடியோவில் அவர் கூறுகையில், எனக்கு ஒருவரை பிடித்தால் அவருக்கு என்னை பிடிக்கவில்லை, வேறு ஒருவருக்கு என்னை பிடித்து இருந்தால் எனக்கு அவரை பிடிக்கவில்லை என யாஷிகா தெரிவித்து உள்ளார்.  இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி நெட்டிசன்கள்  பல்வேறு கமெண்ட்களை  குவித்து வருகின்றனர்.


Advertisement