மிரட்டல் காட்சிகள்.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட டீசர் இதோ..!
நான்கு மாதங்களாக படுத்த படுக்கையாக இருந்த யாஷிகா!! அடையாளமே தெரியாமல் மாறிப்போன பரிதாபம்.. வைரல் புகைப்படம்..

விபத்தில் இருந்து மீண்ட நடிகை யாஷிகா ஆனந்தின் தற்போதைய புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகிவருகிறது.
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் யாஷிகா. இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் மூலம் பிரபலமான இவர் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.
தொடர்ந்து சினிமாவில் பிசியாக இருந்துவந்த யாஷிகா, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெரிய கார் விபத்து ஒன்றில் சிக்கினார். இந்த விபத்தில் யாஷிகாவின் நெருங்கிய தோழி பவானி என்பவர் சம்பவ இடத்திலையே பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்தில் படுகாயமடைந்த யாஷிகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தநிலையில், தற்போது மீண்டும் வெளியே நடமாட தொடங்கியுள்ளார். இந்நிலையில் யாஷிகா அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.
அந்த நிகழ்ச்சியில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களில் அவர் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிப் போயிருக்கிறார். விபத்துக்குப் பின்பு இப்படி ஆகிட்டாரே என அவரது புகைப்படங்களுக்கு நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.