சினிமா

என்னது.. நடிகை வரலக்ஷ்மிக்கு மகன் இருக்காரா! முதல் முறையாக வெளியிட்ட வீடியோ! ஷாக்கான ரசிகர்கள்!!

Summary:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் வரலக்ஷ்மி. இவர் பிரபல முன்னணி நடி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் வரலக்ஷ்மி. இவர் பிரபல முன்னணி நடிகர் சரத்குமாரின் மகள் ஆவார். சிம்பு நடிப்பில் வெளிவந்த போடா போடி திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமான அவர் அதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் அவர் வில்லியாகவும் அவதாரமெடுத்து தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த சர்க்கார் மற்றும் சண்டைக்கோழி 2 போன்ற படங்களில் மிரட்டியிருந்தார். நடிகை வரலக்ஷ்மி கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து  நடிக்கக் கூடியவர். அவரது கைவசம் தற்போது காட்டேரி, பாம்பன், பிறந்தாள் பராசக்தி, கலர்ஸ், யானை, ஆகிய தமிழ் படங்களும், லாகம் என்ற கன்னட படமும்  உள்ளது.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் நடிகை வரலக்ஷ்மி  அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். அவர் தற்போது தனது செல்ல நாய் குட்டியை முதன்முறையாக உலகிற்கு அறிமுகம் செய்யும் வீடியோவை, 'எனது மகனை அறிமுகம் செய்கிறேன்' என பதிவிட்டு வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.
 


Advertisement