சினிமா

நடிகை தேவயானி வீட்டில் இப்படி ஒரு சோகமா? சோகத்தில் மூழ்கிய குடும்பம்.

Summary:

Actress thevaiyani mother passed away

தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை தேவயானி. கவர்ச்சிக்கு முக்கியத்துவம் இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் உள்ள சிறந்த படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து மக்களுக்கு மிகவும் பிடித்தமான நடிகைகளில் ஒருவராக இருந்தார் நடிகை தேவயானி.

அதன்பின்னர் புது முக நடிகைகளின் வருகை, வயது அதிகரிப்பு போன்ற காரணங்களால் சினிமாவை விட்டு விலகி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கோலங்கள் என்ற தொடரில் நடித்து மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். தற்போது சினிமா, சீரியல் எல்லாவற்றிலும் இருந்து ஒதுங்கி பிரபல பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலைபார்த்துவருகிறார்.

இந்நிலையில் இவரது தாயார் லட்சுமி அவர்கள் நேற்று காலை உடல்நலக் குறைவால் காலமானார். தாயாரின் திடீர் இழப்பால் இவரது குடும்பமே தற்போது பெரும் சோகத்தில் உள்ளது. தேவயானியின் தாய் மறைவுக்கு பல்வேறு சினிமா பிரபலங்களும் தங்களது இரங்கலை தெரிவித்துள்னனர்.

Image result for devayani mother


Advertisement