சினிமா

சினிமாவுக்காக எதையும் செய்வேன்!. ஓப்பனாக பேசிய நடிகை டாப்சி!.

Summary:

சினிமாவுக்காக எதையும் செய்வேன்!. ஓப்பனாக பேசிய நடிகை டாப்சி!.


தமிழ் சினிமாவில் தனுஷ் நடித்த ஆடுகளம் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை டாப்சி. தனது அறிமுக படத்தில் சிறப்பான வரவேற்பினை பெற்ற டாப்சிக்கு அடுத்து நடித்த படங்கள் வரிசையாக தோல்வி அடைய இவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு குறைந்தது.

ஆனாலும் தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை டாப்சி.கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் அவரை தேடி வருகின்றன. இப்போது டாப்சி கைவசம் 4 இந்தி படங்கள் உள்ளன.  இவர் தனது சினிமா பயணத்தை பற்றி மிகவும் ஓப்பனாக பேசியுள்ளார்.

படங்கள் தோற்றால் வாழ்க்கையே முடிந்துவிட்டதாக அர்த்தம் இல்லை. ஒரு படம்தானே தோல்வி அடைந்தது என்று அடுத்த படத்துக்கு முயற்சி செய்வேன். சினிமா இல்லாவிட்டால் வாழ்க்கை போய்விடாது. வேறு ஏதாவது தொழில் செய்வேன்.

மேலும் சினிமாவில் எனக்கென்று தனி பாணியை உருவாக்கி நடிக்கிறேன். பல வருடங்களுக்கு பிறகு ரசிகர்கள் என்னை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டுமானால் மற்றவர்களை பின்பற்றுவதை விட எனக்கென்று புதிய பாணி இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து இருக்கிறேன். 

ஆடை அணிவதில் மட்டும் கொஞ்சம் அக்கறை எடுப்பேன். சினிமாவுக்காக எதையும் செய்ய தயார். கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் என்ன தேவையோ அதை செய்ய தயாராக இருக்கிறேன் என கூறினார்.


Advertisement