சினிமா

சூப்பர்..ரோஜா சீரியல் நடிகை வெளியிட்ட ஹேப்பியான நியூஸ் !வாழ்த்துக்களை தெறிக்கவிடும் ரசிகர்கள்!!

Summary:

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று டிஆர்பியிலும் முன்

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று டிஆர்பியிலும் முன்னணி வந்து செம ஹிட்டான தொடர் ரோஜா. இந்த தொடருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்த தொடரில் ஹீரோவாக அர்ஜுன் கதாபாத்திரத்தில் சிப்புசூர்யன், ஹீரோயினாக ரோஜா கதாபாத்திரத்தில் பிரியங்கா நல்காரி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

மேலும் இந்த தொடரில் மிரட்டலான வில்லியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் ரீச்சானவர் நடிகை ஷாம்லி சுகுமார். இவர் பல தொடர்களில் நடித்துள்ளார். மேலும் இவர் எத்தகைய கதாபாத்திரமாக இருந்தாலும், அதனை ஏற்று அனைவரும் வியக்குமளவிற்கு சிறப்பாக நடிக்கக் கூடியவர். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் யூடியூபில் ஆக்டிவாக இருக்கும் ஷாம்லி அவ்வப்போது லைப் ஸ்டைல் தொடர்பான ஏராளமான வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், அவர் அன்னையர் தினத்தன்று தான் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான விஷயத்தை கணவருக்கு சர்ப்ரைஸாக கூறியுள்ளார். அந்த வீடியோவை அவர் யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது வைரலாகி ரசிகர்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.


Advertisement