43 வயதில் இரண்டாவது திருமணமா? வெளிப்படையாக உண்மையை போட்டுடைத்த நடிகை சுரேகா வாணி!actress-sureka-vani-clarifies-about-his-second-marriage

தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த உத்தமபுத்திரன் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை சுரேகா வாணி.  அதனைத் தொடர்ந்து அவர் தெய்வத்திருமகள் படத்தில் எம். எஸ் பாஸ்கரின் மனைவியாக நடித்திருந்தார். மேலும் காதலில் சொதப்புவது எப்படி, ஜில்லா, பிரம்மா, எதிர்நீச்சல், மெர்சல், விஸ்வாசம், மாஸ்டர் என தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ள சுரேகா வாணியின் கணவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார். இவருக்கு ஒரு பெண்குழந்தை உள்ளது. இந்த நிலையில் சமூகவலைதளங்களில் பிசியாக இருக்கும் சுரேகா வாணி அவ்வப்போது தனது கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்து வருகிறார். 

sureka vani

இந்த நிலையில் தற்போது 43 வயதாகும் சுரேகா வாணி இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் பரவியது. இதுகுறித்து விளக்கமளித்து சுரேகா வாணி கூறுகையில், நான் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக பரவி வரும் தகவலில் உண்மை இல்லை. அப்படியொரு திட்டமும் இல்லை. மேலும் எனது மகளோ, குடும்பத்தினரோ என்னை 2-வது திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தவும் இல்லை. நான் எனது சினிமா வாழ்க்கையில் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.