நீண்ட நாட்களுக்கு பிறகு அப்படியொரு புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சுனைனா! எப்படி மாறிட்டாருனு பாருங்களே! - TamilSpark
TamilSpark Logo
சினிமா

நீண்ட நாட்களுக்கு பிறகு அப்படியொரு புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சுனைனா! எப்படி மாறிட்டாருனு பாருங்களே!

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை சுனைனா.  2008 ஆம் ஆண்டு நகுலுடன் இணைந்து நடித்த காதலில் விழுந்தேன் என்ற படத்தின்  மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து மாசிலாமணி, வம்சம், நீர்ப்பறவை போன்ற ஒருசில தமிழ் படங்களில் நடித்தார் சுனைனா. ஆனால் அவருக்கு ஒரு திருப்புமுனை தரும் அளவிற்கு எந்த படங்களும் அமையவில்லை. விஜயுடன் தேறி படத்தில் மணப்பெண்ணாக ஒரே ஒரு சீனில் நடித்திருந்தார்.

தொடர்புடைய படம்

இவர் தற்போது தெலுங்கில் உருவாகியிருக்கும் High Priestess என்ற வெப் தொடரில் நடிகை அமலாவுடன் நடித்து வருகிறார். இந்த தொடரில் இவர்களுடன் வரலக்ஷ்மி, நடிகர் கிஷோர் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் ரசிகர்களின் பார்வையில் இருந்து நீண்ட நாட்கள் ஒதுங்கியிருந்த நடிகை சுனைனா இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். 


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo