சினிமா

என்ன போஸ்டா இது! மிரர் கண்ணாடியில் போஸ் கொடுத்து மெர்சலாக்கும் நடிகை சுனைனா! வைரல் புகைப்படம்...

Summary:

நடிகை சுனைனாவின் மிரர் கண்ணாடி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை சுனைனாவின் மிரர் கண்ணாடி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தெலுங்கு, கன்னட படங்கள் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், தமிழ் சினிமாவில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நகுல் நடிப்பில் வெளியாகி செம ஹிட்டான காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் சுனைனா. 

அப்படத்தை தொடர்ந்து அவர் நீர்ப்பறவை, மாசிலாமணி, வம்சம், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த சில்லுக்கருப்பட்டி திரைப்படம் இவரது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றுத்தந்தது.

மேலும் சுனைனா தற்போது தெலுங்கில் ராஜ ராஜ சோரா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களிலும் ஆக்ட்டிவ் ஆகவும் இருந்து வருகிறார். அந்தவகையில் அவர் தற்போது மிரர் கண்ணாடியில் போஸ் கொடுத்த புகைப்படம் ஒற்றை வெளியிட, இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement