சினிமா

கேன்சரால் நடிகை ஸ்ரீதேவியின் சகோதரி மரணம்!

Summary:

Actress sujatha kumar passed away due to cancer

"இங்லீஷ் விங்லீஷ்" திரைப்படத்தில் நடிகை ஸ்ரீதேவியின் அமெரிக்க அக்காவாக நடித்தவர்  பாலிவுட் நடிகை சுஜாதா குமார். இவர் பல மாதங்களுக்கு முன் கேன்சரால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி  நேற்று சுஜாதா குமார் உயிரிழந்தார். 

சுஜாதாவின் மரணத்தை  குறித்து,  அவரது சகோதரி சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி நேற்று இரவு ட்விட்டரில் தனது வருத்தத்தை பதிவு  செய்து இருந்தார் . 

அந்த பதிவில் " என் சகோதரி சுஜாதாகுமார் நம்மை விட்டு சென்று விட்டார். மரணத்தால் இந்த உலகத்தைக் காட்டிலும் சிறந்த ஒரு இடத்துக்கு அவரது ஆத்மா சென்றடையக் கூடும் என்றாலும் அவர் இல்லாத வெற்றிடத்தை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. ஆகஸ்ட் 19 இரவு 11.26 மணியளவில் அவர் உயிரந்தார். அவள் இல்லாத  வாழ்க்கை மீண்டும் பழைய மாதிரி திரும்புவது கடினம்" என்று தெரிவித்தார். 

நடிகை சுஜாதா குமார் இதுவரை 24 தொடர்கதைகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.   


Advertisement