சினிமா

மஞ்ச காட்டு மைனா.. எப்படி கொஞ்சி கொஞ்சி சிரிக்கிற... ஸ்ரீதிவ்யா கியூட் புகைப்படம்!

Summary:

நடிகை ஸ்ரீதிவ்யாவின் மஞ்சள் நிற உடையில் உள்ள அழகிய புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியி

நடிகை ஸ்ரீதிவ்யாவின் மஞ்சள் நிற உடையில் உள்ள அழகிய புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து, இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உருவானது.

அதனை தொடர்ந்து இவர் காக்கி சட்டை, பென்சில், மருது, வெள்ளைக்காரதுரை போன்ற பல படங்களில்  நடித்துள்ளார். மேலு‌ம் தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி படங்களிலும்  நடித்துள்ளார் அம்மணி.

 பின்னர் கடைசியாக அவர்  2017ம் ஆண்டு சங்கிலி புங்கிலி கதவ தொற என்ற படத்தில் நடித்திருந்தார்.  பின்னர் 3 வருஷமாக அவருக்கு சொல்லிகொள்ளுமளவிற்கு படவாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தது. 

இந்த நிலையில் ஸ்ரீ திவ்யா தற்போது நடிகர் கவுதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக, பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதில் ஸ்ரீதிவ்யா பிசியோதெரபி மருத்துவராக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், தற்போது மஞ்சள் நிற சுடியில் கீயூட் போஸ் கொடுத்த புகைப்படம் 


Advertisement