என்ன ஒரு பளப்பளப்பு.. நடிகை சினேகா அவரது அம்மா மற்றும் அக்காவுடன் இருக்கும் அழகிய புகைப்படம் இதோ!!

என்ன ஒரு பளப்பளப்பு.. நடிகை சினேகா அவரது அம்மா மற்றும் அக்காவுடன் இருக்கும் அழகிய புகைப்படம் இதோ!!


actress-snega-family-photo-NX75F4

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ஸ்னேகா. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை பூர்விகமாக கொண்ட இவர் என்னவளே என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை  தொடர்ந்து அவர் பல  முன்னணி ஹீரோக்களின் படங்களில்  இணைந்து  நடித்து தற்போது சினிமாவில் தனக்கென தனி இடத்தை  பிடித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விஹான் என்ற மகனும், ஆத்யந்தா என்ற மகளும் உள்ளனர். சிறிது காலம் சினிமாவிற்கு இடைவெளிவிட்டிருந்த சினேகா தற்போது மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

மேலும் சமூக  வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆகவும்  இருக்கிறார். சமீபத்தில் தனது மகளின் இரண்டாவது வருட பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களை தனது  இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். இந்நிலையில் தற்போது சினேகா அவரது அம்மா மற்றும் அக்காக்களுடன் போஸ் கொடுத்துள்ள அழகிய புகைப்படம் ஒன்று தற்போது ரசிகர்கள் மூலம்  இணையத்தில் செம  வைரலாகி  வருகிறது. இதோ  அந்த புகைப்படம்...

SnegaSnega