சினிமா

வாவ்..!! சேலையில் பார்க்க சிலைபோல் இருக்கும் நடிகை ஸ்ருதி ராஜ்.. வைரல் புகைப்படங்கள்..

Summary:

சீரியல் நடிகை ஸ்ருதிராஜின் அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சீரியல் நடிகை ஸ்ருதிராஜின் அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரின் மூலம் சின்னத்திரையில் பிரபலமானவர் சீரியல் நடிகை ஸ்ருதி ராஜ். தென்றல் தொடரில் இவர் நடித்த துளசி என்ற கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆபிஸ் தொடரில் நாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.

அதனை தொடர்ந்து பல்வேறு தொடர்களில் நடித்துவந்த இவர் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் புது தொடர் ஒன்றிலும் நாயகியாக நடித்துவருகிறார். சீரியல், மாடலிங், விளம்பரம் என ஒருபுறம் பிசியாக இருந்தாலும், எப்போதும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பயங்கர ஆக்டிவாக உள்ளார் ஸ்ருதி ராஜ்.

தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டுவரும் இவர், தற்போது பட்டு சேலையில் பார்க்க ஆர்ப்பரிக்கும் அழகில் இருக்கும் தனது புகைப்படங்களை வெளியிட, தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.


Advertisement