வீடியோ: யாருக்குமே தெரியாமல் குழந்தை பெற்றுக்கொண்ட நடிகை ஷ்ரேயா.!! 1 வருடம் கழித்து வெளியான ரகசியம்..

வீடியோ: யாருக்குமே தெரியாமல் குழந்தை பெற்றுக்கொண்ட நடிகை ஷ்ரேயா.!! 1 வருடம் கழித்து வெளியான ரகசியம்..


Actress shreya blessed with baby girl

நடிகை ஸ்ரேயா தனது குழந்தையின் வீடியோவை முதல் முறையாக சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு என தென்னிந்தியளவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஷ்ரேயா சரண். ரஜினி, விஜய், விஷால் என தமிழ் சினிமாவின் பெரும்பாலான முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

shreya

இந்நிலையில் நடிகை ஷ்ரேயா கடந்த ஆண்டு கர்ப்பமாக இருந்ததாகவும், கடந்த ஆண்டு இறுதியில் அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்ததாகவும் தற்போது தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். ஷ்ரேயா கர்ப்பமாக இருந்த தகவலே யாருக்கும் தெரியாத நிலையில், தற்போது அவரது குழந்தையை பார்த்த ரசிகர்கள் மிகவும் ஆச்சரியத்தில் உள்ளனர்.