இந்தியா சினிமா Covid-19

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க நர்ஸாக மாறிய பிரபல நடிகை..! குவியும் வாழ்த்துக்கள்.!

Summary:

Actress shika malhotra turns to a nurse for treating corono patients

கொரோனா வைரஸ் தீவிரமாக பரவிவரும் நிலையில், நடிகை ஒருவர் தன்னார்வலராக செவிலியர் பணியில் சேர்ந்திருப்பது அனைவர் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் நடிகர் சஞ்சய் மிஷாராவுடன் இணைந்து காஞ்ச்லி என்ற படத்தில் நடித்தவர் பாலிவுட் நடிகை ஷிகா மல்ஹோத்ரா. சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் டெல்லி வர்தமான் மஹாவீர் மருத்துவக் கல்லூரி மற்றும் சஃப்ர்தார்ஜுங் மருத்துவமனையில் 5 ஆண்டுகளாக செவிலியர் பட்டப்படிப்பு படித்துள்ளார்.

சினிமா துறைக்கு வந்துவிட்டதால் செவிலியர் பணியில் சேராத இவர் தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சேவையாற்ற மும்பையில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் தன்னார்வலராக இணைந்து செவிலியர் பணி செய்து வருகிறார்.

இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ஷிகா மல்ஹோத்ரா, செவிலியராகவும், நடிகையாகவும் நாட்டு மக்களுக்குச் சேவையாற்ற நான் எப்போதும் தயாராக இருக்கின்றேன், மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்து அரசுக்கு உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரபல நடிகை ஒருவரின் இந்த செயல் அனைவரையும் ஆச்சரியப்பட்டவைத்துல நிலையில், பலரும் அவரை பாராட்டி வருகிக்கின்றனர்.


Advertisement