பார்ரா..விஜய் டிவி சீரியல் நடிகரை காதலிக்கும் செம்பருத்தி பார்வதி!அது யார்னு தெரியுமா?? செம சர்ப்ரைஸில் ரசிகர்கள்!!

பார்ரா..விஜய் டிவி சீரியல் நடிகரை காதலிக்கும் செம்பருத்தி பார்வதி!அது யார்னு தெரியுமா?? செம சர்ப்ரைஸில் ரசிகர்கள்!!



actress shabana loves actor aaryan

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று டிஆர்பி யில் முன்னணியில் வந்து ஹிட்டான தொடர் செம்பருத்தி. இந்த தொடரில் கதாநாயகியாக பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதை பெருமளவில் கவர்ந்தவர் ஷபானா. இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

 நடிகை ஷபானா அண்மையில் பேட்டி ஒன்றில், தனக்கு அடுத்த ஆண்டு திருமணம் நடைபெற இருப்பதாகவும், மாப்பிள்ளைக்கு கண்டிப்பாக தாடி எடுக்க வேண்டுமெனவும் கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது ஷபானாவின் காதலர் பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆர்யன் என தகவல்கள் பரவி வருகிறது.

shabna

நடிகர் ஆர்யன் அண்மையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் லைவ் சாட்டில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது ரசிகை ஒருவர் ஆர்யனிடம் திருமணம் செய்துகொள்ளும்படி கேட்டுள்ளார். அதற்கு அவர், அப்ப ஷபானாவிற்கு என்ன சொல்வது? என கேட்டிருந்தார். மேலும் ஷபானாவும் Mine அதாவது என்னுடையது என அதற்கு பதிலளித்திருந்தார். இந்த நிலையில் இருவரும் காதலிப்பதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகிறது.

shabna