இந்தியா சினிமா

நாளுக்குநாள் பிரபல நடிகைக்கு தொடர்ந்த கொடூரம்.! அதிரடியாக கைது செய்யப்பட்ட நடிகர்!!

Summary:

actress sewtha diwaari complaint on her husband

இந்தி தொலைக்காட்சியில் ஏராளமான தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் ஸ்வேதா திவாரி. இவர் இவர் நாகினி தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். 

மேலும் ஸ்வேதா திவாரி இந்தி நடிகர் ராஜா சவுத்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு பாலக் என்ற மகள் உள்ளார். இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 9 வருடங்களுக்கு முன்பு விவாகரத்து செய்து கொண்டனர். 

அதனை தொடர்ந்து ஸ்வேதா திவாரி இந்தி நடிகர் அபினவ் கோலியை காதலித்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான அபினவ்வுக்கு ஸ்வேதாவுக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கணவர் அபினவ் மீது ஸ்வேதா திவாரி மும்பை காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில் தினமும் குடித்துவிட்டு வந்து அபினவ் தன்னையும், தனது மகளையும்  அடித்து துன்புறுத்துகிறார் என்று கூறியுள்ளார். அதனை தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அபினவ்வை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


 


Advertisement