சினிமா

வாவ்.. செம கியூட்... என்ன என்னமோ பண்ணுது பாப்பு... நடிகை சமீரா ரெட்டி மகளின் கியூட் வீடியோ!

Summary:

நடிகை சமீரா ரெட்டி மகளின் கியூட் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் செம வைரலாகி வருகிறது.

நடிகை சமீரா ரெட்டி மகளின் கியூட் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் செம வைரலாகி வருகிறது.

தமிழ்சினிமாவில் சூர்யா நடிப்பில் வெளியான வாரணம் ஆயிரம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பெருமளவில் பிரபலமானவர் நடிகர் சமீரா ரெட்டி. அதனைத் தொடர்ந்து அவர் வேட்டை, வெடி, அசல், நடுநிசி நாய்கள் என பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு சமீரா  தொழிலதிபர் அக்ஷய் வர்தே என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இருகுழந்தைகள் உள்ளனர்.

மேலும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருக்கும் சமீரா ரெட்டி அடிக்கடி தனது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். இன்று அவரது செல்ல  மகள் மொபைல்லில் கியூட்டா செலஃபீ எடுக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement