அடக்கடவுளே.. சமந்தாவுக்கா இப்படியொரு நிலை?.. சிகிச்சைக்காக USA செல்லும் சமந்தா..! திடீர்னு என்னதான் ஆச்சு?..!!Actress Samantha suffers skin disease

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம்வருபவர் நடிகை சமந்தா. இவர் சூர்யா, விஜய், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமடைந்தார். இது மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டினார்.

அத்துடன் காபி வித் கரன் என்ற நிகழ்ச்சியில் கலந்து அனைவரது கவனத்தையும் பெற்றார். இறுதியாக சமந்தா "புஷ்பா" படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற பாட்டில் கவர்ச்சியாக நடனமாடியிருந்தார். 

Actress samantha

அடுத்ததாக சமந்தாவின் நடிப்பில் சகுந்தலம், குஷி, யசோதா போன்ற படங்கள் வெளியாக இருக்கும் நிலையில், தோல் சம்பந்தப்பட்ட நோயால் சமந்தா பாதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல் கிடைத்துள்ளது.

மேலும், சிகிச்சை பெறுவதற்காக வெளிநாடு செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது. Polymorphous Light Eruption என்ற நோயால் அவர் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்றும், சிகிச்சை முடிந்து இந்தியா வந்ததும் அவர் குஷி படப்பிடிப்பில் இணைவார் என்றும் கூறப்படுகிறது.