சினிமா

இது சமந்தாவா..? இது சமந்தானு சொன்னா அவங்க அம்மா கூட நம்ப மாட்டாங்க.. வைரல் புகைப்படம்..

Summary:

நடிகை சமந்தாவின் ரசிகர்கள் சிலர் சமந்தாவிற்கு கோவில் கட்டி சிலை ஒன்றை வடிவமைத்து உள்ளனர்.

நடிகை சமந்தாவின் ரசிகர்கள் சிலர் சமந்தாவிற்கு கோவில் கட்டி சிலை ஒன்றை வடிவமைத்து உள்ளனர்.

தமிழ், தெலுங்கு என தென்னிந்தியா முழுவதும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை சமந்தா. சினிமாவில் புகழின் உச்சத்தில் இருக்கும் இவர் பிரபல நடிகை நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்திவரும் சமந்தா தற்போது வெப் சீரிஸில் முழு கவனத்தையும் செலுத்திவருகிறார்.

மேலும் தமிழ் சினிமாவில் தற்போது இவருக்கு பெரியளவில் வாய்ப்புகள் இல்லாவிட்டாலும், இவருக்கென ஒரு பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது. இந்நிலையில் நடிகை சமந்தாவின் ரசிகர்கள் சிலர், அவருக்கு கோவில் கட்டி, சிலை ஒன்று வைத்துள்ள புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

அந்த புகைப்படத்தில் இருக்கும் சமந்தாவை பார்க்கும் ரசிகர்கள், "இது சமந்தானு சொன்னா, சமந்தாவின் புருஷன் கூட நம்பமாட்டார்" என கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம். நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கமெண்டை பதிவிடுங்கள்.


Advertisement