சினிமா

சினிமாவுக்கு வந்து 10 வருஷமாச்சு! போதும் இனி வேண்டாம்.! நடிகை சமந்தா எடுத்த அதிரடி முடிவு!!

Summary:

நடிகை சமந்தா இனி கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்காமல், நடிப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடிக்க முடிவு எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

தமிழ், தெலுங்கு என தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சமந்தா. தமிழில் விஜய், சூர்யா, விக்ரம் என பெரும்பாலான டாப் ஹீரோக்களின் படங்களில் நாயகியாக நடித்துவிட்டார். சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

மேலும் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் சினிமா வாழ்க்கை குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அப்பொழுது அவர் நான் சினிமாவிற்கு வந்த புதிதில் எனக்கு கவர்ச்சியான கதாபாத்திரங்களே அமைந்தது. ஆனால் தற்போது இந்த நிலைமை மாறியுள்ளது.

10 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். ஆனால் இனிமேல் கவர்ச்சியாக நடிக்காமல் நடிப்புத் திறமையை வெளியே கொண்டுவருவது போன்ற, நடிப்புக்கு மட்டும் முக்கியத்துவம் இருக்கும் கதாபாத்திரங்களில் நடிக்க  முடிவெடுத்துள்ளேன் என கூறியுள்ளார்.


Advertisement