சினிமா

தனது கணவருக்காக படம் ரிலீஸை தள்ளி வைக்கும் நடிகை...!

Summary:

தனது கணவருக்காக படம் ரிலீஸை தள்ளி வைக்கும் நடிகை...!

சமந்தா நடிப்பில் வெளிவந்த ரங்கஸ்தலம், நடிகையர் திலகம், இரும்புத்திரை ஆகிய மூன்று படங்களும் மெகா ஹிட்டானது.

Image result for samantha and naga chaitanya

இந்த நிலையில், சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்த சீமராஜா படம் வருகிற செப்டம்பர் மாதம் 13-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில், சமந்தாவின் அடுத்த ரிலீஸ் குறித்த அறிவிப்பும் வெளிவந்துள்ளது. 

அதன் பிறகு பவன் இயக்கத்தில் சமந்தா நடித்துள்ள "யு டர்ன்" படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படமும் சீமராஜா ரிலீஸ் தேதியான செப்டம்பர் 13-ஆம் தேதியே ரிலீசாக உள்ளது.

நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையான இந்த படத்தில், அடுத்தடுத்து நடக்கும் கொலைகள் குறித்த துப்பறியும் கதாபாத்திரத்தில் இளம் பத்திரிக்கை நிருபராக சமந்தா நடித்துள்ளார். சமந்தாவின் காதலராக ராகுல் ரவீந்திரனும், முக்கிய கதாபாத்திரங்களில் ஆதி, நரேன், பூமிகா உள்ளிட்ட பலரும் நடித்து இருக்கின்றனர். 

மேலும், மகேஷ்பாபு, சமந்தா நடித்த "சீதம்மா வகிட்லோ ஸ்ரீமல்லெ செட்டு" என்ற தெலுங்கு படத்தின் தமிழ் டப்பிங் படமான "நெஞ்சமெல்லாம் பல வண்ணம்‘" என்ற படமும் அதே செப்டம்பர் 13ம் தேதியே ரிலீசாக உள்ளது.

இந்த நிலையில், அதே நாளில் நாகசைதன்யா நடித்துள்ள ‘சைலஜா ரெட்டி அல்லுடு’ படமும் வெளியாக உள்ளது. திருமணத்திற்குப் பின் அவர் கதாநாயகனாக நடித்து வெளியாகும் முதல் படம் இதுவாகும். முன்னதாக சமந்தா தனது கணவரின் படத்துக்காக தனது பட ரிலீசை தள்ளிவைப்பார் என்று செய்திகள் பரவியது.


Advertisement