வாவ்.. நொடிக்கு நொடி விதவிதமா மாறும் உடை.. சமந்தாவின் வைரலாகும் வேற லெவல் வீடியோ பாருங்க..
நடிகை சமந்தாவின் வித விதமான ட்ரெஸ் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகிகளில் ஒருவராக இருப்பவர் நடிகை சமந்தா. நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக பானா காத்தாடி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான இவர் இன்று தமிழ், தெலுங்கு சினிமாவில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்துவிட்டார்.
தமிழ் சினிமாவை போலவே தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகும் பல்வேறு படங்களில் நடித்துவருகிறார் சமந்தா.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களிலும் பிஸியாக இருந்து வருகிறார். தற்போது சமந்தா வித விதமான ட்ரெஸ்ஸை டக்கு டக்குனு மாத்தி டான்ஸ் ஆடின வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.