கருப்பு உடையில் கண்ணை கவரும் சாக்ஷி அகர்வால்!! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்..

கருப்பு உடையில் கண்ணை கவரும் சாக்ஷி அகர்வால்!! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்..


actress-sakshi-agarwal-latest-photo-A5JXHL

நடிகை சாக்ஷியின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் காலா, க க க போ, டெட்டி, விஸ்வாசம் போன்ற படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தவர் சாக்‌ஷி அகர்வால். இவரை பிரபலமாக்கியது பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தான். 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்தை அடுத்து தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவராக உள்ளார். முதல் முறையாக 'புரவி' என்கிற தமிழ் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் சாக்ஷி. இருப்பினும் இவருக்கும் பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு அதிக படவாய்ப்புகளை எதிர்பார்த்து வருகிறார். அந்தவகையில் அவர் தற்போது கருப்பு உடையில் இருக்கும் கவர்ச்சி புகைப்படம் ஒற்றை வெளியிட, இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறது.