ஸ்லீவ்லெஸ் புடவையில் சில்லறை சிரிப்பில் சிதறடிக்கும் நடிகை சாய் பல்லவி ! இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்...

ஸ்லீவ்லெஸ் புடவையில் சில்லறை சிரிப்பில் சிதறடிக்கும் நடிகை சாய் பல்லவி ! இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்...



actress-saipallavi-latest-photo-TAS49G

பிரேமம் என்ற மலையாள படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி.

அதனை தொடர்ந்து அவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் ஏராளமான படவாய்ப்புகள் குவிய தொடங்கியது. மேலும் சாய்பல்லவி தமிழில் என்.ஜி.கே மற்றும் மாரி 2 திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவருக்கு தமிழில் எந்த படமும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஓடவில்லை. ஆனால், மாரி 2 படத்தில் இவர் ஆடிய ரவுடி பேபி பாடல் உலகளவில் ஹிட் அடித்து பல்வேறு சாதனைகளை படைத்தது.

தற்போது ஷியாம் சிங்கா ரெட்டி மற்றும் விர்ட்டா பர்வம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில் சினிமாவில் பிசியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் சாய் பல்லவி,  தற்போது பட்டு புடவையில் உள்ள அழகிய  புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி எக்கச்சக்க லைக்ஸ் மற்றும் கமெண்ட்களை பெற்று வருகிறது.