அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
பொண்ணுங்ககிட்டதான் அதெல்லாம் அதிகமா இருக்கும்.! ஆனா பசங்களுக்கு.. நடிகை சாய்பல்லவி ஓபன் டாக்!!
மலையாளத்தில் பிரேமம் படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அனைவரின் மனதையும் கவர்ந்து பெருமளவில் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. அவர் இதற்கு முன்பு விஜய் டிவியில் உங்களில் யார் அடுத்த பிரபு தேவா போன்ற நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
பின்னர் தமிழில் தியா என்ற படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்த சாய் பல்லவி மாரி 2, என்.ஜி.கே போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கிலும் அவரது கைவசம் ஏராளமான படங்கள் உள்ளன. இந்த நிலையில் நடிகை சாய்பல்லவி சமீபத்தில் பேட்டி ஒன்றில், எனக்கு ஆண்களை விட பெண்களைதான் அதிகம் பிடிக்கும்.ரசித்து பார்ப்பேன் என கூறியுள்ளார்.

பொண்ணுங்கள பார்க்கும் போது வித்தியாசமான ட்ரெஸ் போடுவது, ஹேர்ஸ்டைல் செய்வது, கண் அழகாக இருக்கும் என ஒவ்வொன்றையும் ரசித்து பார்ப்பேன். ஆனால், ஆண்களுக்கு அப்படியில்லை. பேண்ட், சட்டை அவ்வளவுதான். பெண்கள் ஆண்களை விட ஒவ்வொரு விஷயத்திலும் ரொம்ப அழகு என அவர் கூறியுள்ளார்.