சினிமா

ரகசியமாக திருமணம் செய்துகொண்ட அழகு சீரியல் நடிகை! மாப்பிள்ளை இவர்தானா? ஷாக்கான ரசிகர்கள்!!

Summary:

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர் அழகு. இ

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர் அழகு. இந்த தொடரில் நடிகை ரேவதியின் மகளாக காவியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமடைந்தவர் சஹானா. அதைத் தொடர்ந்து அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு தொடரில் ஹீரோ அர்ஜுனை ஒன் சைடாக காதலிக்கும் நெகட்டிவ் ரோலில் நடித்து பிரபலமானார்.

பின்னர் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் தொடரிலும் வில்லியாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து அவர் தற்போது தாலாட்டு மற்றும் கண்ணான கண்ணே தொடரில் நடித்து வருகிறார். சஹானா சீரியல்கள் மட்டுமின்றி சில திரைப்படங்களிலும் சிறு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தநிலையில் சஹானா அண்மையில் டாக்டர் அபிஷேக் என்பவரை ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளார்.

ஆடிமாதம் பிறப்பதற்கு முன் திருமணம் செய்ய வேண்டி இருந்ததால் அவர்கள் அவசரஅவசரமாக எவருக்கும் சொல்லாமல் திருமணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஆகஸ்ட் 14ஆம் தேதி பிரம்மாண்டமாக வரவேற்பு நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் சஹானா தன் கணவருடன் ஹனிமூன் சென்ற புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து பலரும் அவர்களுக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.


Advertisement