சினிமா

உன் பக்கம்தான் காத்து பலமா வீசுதும்மா சாக்‌ஷி.. அந்த விஷயத்தை கேள்விப்பட்டதில் இருந்து சாக்‌ஷி குவியும் வாழ்த்துக்கள்

Summary:

பிக்பாஸ் புகழ் நடிகை சாக்ஷி அகர்வால் ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகியுள்ளார்.

பிக்பாஸ் புகழ் நடிகை சாக்ஷி அகர்வால் ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகியுள்ளார்.

தமிழ் சினிமாவில் ஒருசில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தாலும், பிக்பாஸ் என்ற பிரமாண்ட ஷோ மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். பிக்பாஸ் வீட்டிற்குள் முக்கோண காதல் கதையில் சிக்கி சற்று சர்ச்சைகளை சந்தித்தாலும் பின்னர் அதில் இருந்து வெளியேறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

மேலும் பிக்பாஸ் மூலம் பிரபலமான அம்மணி தற்போது ஆர்யாவின் டெட்டி படத்தில் நடித்துவருகிறார். மேலும் அரண்மனை 3 படத்திலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுபோக புரவி என்ற படத்தில் ஹீரோயினாகவும் நடித்துவருகிறார் சாக்ஷி.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, தற்போது ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகியுள்ளார் சாக்ஷி அகர்வால். தமிழில் வல்லதேசம் என்ற படத்தை இயக்கிய இயக்குனர் நந்தா ஹாலிவுட்டில் 120 ஹவர்ஸ் (120 hours) என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ட்ரைலரை இயக்குனர் இமயம் பாரதிராஜா வெளியிட்டுள்ளார்.

இந்த படத்தில்தான் சாக்ஷி அகர்வால் ஹாலிவுட் சினிமாவில் முதல் முறையாக நடிக்கிறார். இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள், உன் பக்கம்தாம்மா சாக்ஷி காத்து வீசுது என கமெண்டு செய்து, வாழ்த்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்...


Advertisement