சினிமா

48 வயதிலும் தலைவிக்கு தில்ல பாத்திங்களா..! இளைஞர்களுடன் புகுந்து விளையாடிய ரோஜா.. வைரல் வீடியோ..

Summary:

நடிகை ரோஜா கபடி விளையாடிய வீடியோ ஒன்று இணையத்தில் செம வைரலாகிவருகிறது.

நடிகை ரோஜா கபடி விளையாடிய வீடியோ ஒன்று இணையத்தில் செம வைரலாகிவருகிறது.

தமிழ் சினிமாவில் கனவுக் கன்னியாக வலம் வந்த நடிகைகளில் நடிகை ரோஜாவும் ஒருவர். 90 காலகட்டம் தொடங்கி, தற்போதுவரைக்கூட ரோஜாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.  தமிழ் மட்டுமல்லாது தமிழ், கன்னடம், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் கலக்கி வந்த இவர் பின்னர் திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் பிஸியாகிவிட்டார்.

பின்னர் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியில் தன்னை 1999 ஆம் ஆண்டு இணைத்துக்கொண்ட இவர் அதன்பிறகு அரசியல் மற்றும் குடும்ப வாழ்க்கை என வாழ்ந்துவருகிறார்.தற்போது ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.

இந்நிலையில் தனது தொகுதியில் நடந்த கபடி போட்டியை தொடங்கி வைக்க சென்றிருந்த ரோஜாவுக்கு அந்த பகுதி இளைஞர்கள் மற்றும் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனால் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போன ரோஜா, யாரும் எதிர்பாராத நிலையில், திடீரென களத்தில் இறங்கி, அங்கிருந்த இளைஞர்களுடன் கபடி விளையாட தொடங்கினார்.

இதனால் இளைஞர்களும் நகரி சட்டமன்ற தொகுதி மக்களும் மிகவும் உற்சாகம் அடைந்தனர். 48 வயதிலும் களத்தில் இறங்கி தில்லாக கபடி விளையாடிய நடிகை ரோஜாவின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.


Advertisement