நடிகை ரோஜாவுக்கு இவ்வளவு பெரிய மகளா?! ஹீரோயின் போலவே இருக்காங்களே.!

நடிகை ரோஜாவுக்கு இவ்வளவு பெரிய மகளா?! ஹீரோயின் போலவே இருக்காங்களே.!


Actress roja daughter photos

1992ம் ஆண்டு "செம்பருத்தி" திரைப்படத்தில் அறிமுகமானவர் ரோஜா. அந்தப் படத்தில் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் ஆர்.கே. செல்வமணியையே காதலித்து திருமணம் செய்துகொண்டார் ரோஜா. இறுதியாக 2015ம் ஆண்டு தமிழில் "என் வழி தனி வழி" என்ற படத்தில் நடித்திருந்தார்.

Roja

அதன் பின்னர் தீவிர அரசியலில் ஈடுபடத் தொடங்கிய ரோஜா, தற்போது ஆந்திர சட்டமன்ற உறுப்பினராகவும், சுற்றுலாத்துறை அமைச்சராகவும் உள்ளார். தமிழில் ரஜினி, பிரபு, சரத்குமார் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார் ரோஜா.

ரோஜா - செல்வமணி ஜோடிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதில் சமீபத்தில் ரோஜாவின் மகள் அன்ஷூ மாலிகா தனது இருபதாவது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

Roja

பார்ப்பதற்கு ரோஜா போலவே அழகாக இருக்கும் அன்ஷூ மாலிகாவின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இந்நிலையில் ரோஜா தனது மகளை நடிக்க வைக்க முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.