முதல்வர் பிறந்தநாள்! நடிகை ரோஜா செய்த அற்புதமான காரியம்! குவியும் வாழ்த்துக்கள்!actress-roja-adopted-17-years-girl-student

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ரோஜா தற்போது ஆந்திர மாநிலம் நகரி தொகுதியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ-வாக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் நேற்று அக்கட்சியின் தலைவரான ஜெகன்மோகன் ரெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

 அந்த நாளில்  தான் ஏதேனும் நல்லது செய்ய வேண்டும் என எண்ணிய நடிகை ரோஜா 17 வயது நிறைந்த புஷ்பகுமாரி என்ற மாணவியை தத்தெடுத்துள்ளார். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பச்சிகப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் புஷ்பகுமாரி. ஆதரவற்ற மாணவியான  இவர் திருப்பதியில் உள்ள பெண் குழந்தைகள் நல மையத்தில் தங்கி படித்து வந்தார்.

Roja

மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு நீட் தேர்வில் வெற்றி பெற்றவர் பொருளாதார சூழ்நிலை காரணமாக மருத்துவர் கல்லூரியில் சேர முடியாமல் தவித்து வந்த நிலையில் அவரை நடிகை ரோஜா தத்தெடுத்துள்ளார். மேலும் அந்த மாணவியின் மருத்துவ படிப்பிற்கான அனைத்து செலவுகளையும் ஏற்று அவரது கனவை நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ளார்.